பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் பயணம்; வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்
பிரதமர் மோடி நாளை உத்தரகாண்ட் பயணம்; வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்
ADDED : செப் 10, 2025 01:58 PM

புதுடில்லி: மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நாளை (செப்.,11) செல்கிறார்.
கடந்த 5ம் தேதி உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நாளை செல்கிறார். மாலை 4.15 மணிக்கு தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். அதன்பிறகு, மாலை 5 மணியளவில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரபிரதேசம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.