sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி தாக்குதல் தினம்: உயிர் நீத்த படையினருக்கு மோடி, சிபிஆர் மரியாதை

/

பார்லி தாக்குதல் தினம்: உயிர் நீத்த படையினருக்கு மோடி, சிபிஆர் மரியாதை

பார்லி தாக்குதல் தினம்: உயிர் நீத்த படையினருக்கு மோடி, சிபிஆர் மரியாதை

பார்லி தாக்குதல் தினம்: உயிர் நீத்த படையினருக்கு மோடி, சிபிஆர் மரியாதை

1


UPDATED : டிச 13, 2025 12:12 PM

ADDED : டிச 13, 2025 11:57 AM

Google News

UPDATED : டிச 13, 2025 12:12 PM ADDED : டிச 13, 2025 11:57 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

2001ல் பார்லிமென்டில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் படத்திற்கு, இன்று (டிச.,13) பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்ட் வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். அதை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் 8 பேர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களது நினைவாக, டிசம்பர் 13ம் தேதி ஆண்டுதோறும் பார்லி வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அந்தவகையில் பார்லி வளாகத்தில் இன்று (டிச.,13) மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயிரிழந்த பாதுகாப்பு படையினர் படத்திற்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல், சோனியா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறக்க முடியாது

இது குறித்து பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பார்லிமென்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்துகிறோம். ஜனநாயக கோவிலை காப்பாற்ற துணிச்சலாக செயல்பட்டு உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு படையினரை நாம் ஒருபோதும் மறக்க முடியாது, என்றார்.

ஊக்குவிக்கும்

இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், ''பார்லிமென்ட் மீது கோழைத்தனமான தாக்குதலில் கேடயமாக நின்ற துணிச்சலான பாதுகாப்பு படையினரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். தங்கள் உயிரை பாதுகாப்பு படையினர் தியாகம் செய்தது என்றும் நிலைத்திருக்கும். அவர்களது தியாகம், இந்தியாவின் வலிமையையும், உறுதியையும் ஊக்குவிக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us