sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி; பிரதமர் மோடி

/

போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி; பிரதமர் மோடி

போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி; பிரதமர் மோடி

போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி; பிரதமர் மோடி

3


ADDED : மார் 14, 2026 02:21 PM

Google News

3

ADDED : மார் 14, 2026 02:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: ''போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் பீதியை ஏற்படுத்தி வருகிறது. அது பொறுப்பான கட்சியாக செயல்பட தவறிவிட்டது'' என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரில் ரூ.23,550 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிறகு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியின் போது அசாம் மாநில இளைஞர்களை வன்முறை, பயங்கரவாதத்தின் பாதைக்கு காங்கிரஸ் வழி நடத்தியது. காங்கிரஸ் வட மாநிலங்களை புறக்கணித்து விட்டது. போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

வளர்ச்சி பாதை

காங்கிரஸ் ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் பங்கை ஆற்றியிருக்க வேண்டும், ஆனால் அது அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜவின் தாரக மந்திரமாகும். எல்லைப் பகுதிகளை நாட்டின் கடைசி கிராமங்களாக காங்கிரஸ் கருதியது. ஆனால் நாங்கள் நாட்டின் முதல் கிராமங்களாக கருதினோம். ஒரு காலத்தில் வர்த்தகத்தின் மையமாகத் திகழ்ந்த பராக் பள்ளத்தாக்கின் வலிமை பறிக்கப்பட்டுவிட்டது.

இரட்டை இன்ஜின்

இந்த நிலையை மாற்றியமைக்கவே பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. காங்கிரஸ் கட்சி எங்குச் சிந்திப்பதை நிறுத்துகிறதோ, அங்கிருந்து நாங்கள் எங்கள் பணியைத் தொடங்குகிறோம். காங்கிரசுக்கு அசாம் அல்லது நாடு குறித்த எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை. ஆனால் என்னை அவதூறு செய்வது, வதந்திகளைப் பரப்புவது மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் பொய்களை மட்டுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us