அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டம்: பிரதமர் மோடி வரவேற்பு
அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டம்: பிரதமர் மோடி வரவேற்பு
ADDED : செப் 30, 2025 10:20 AM

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காசா போர் நிறுத்தத்துக்கான விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டார் என நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் போர் நிறுத்த யோசனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
''காசா போர் நிறுத்தம் குறித்த அதிபர் டிரம்பின் விரிவான திட்டத்தை வரவேற்கிறோம். அதிபர் டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால மற்றும் நிலையான அமைதியை வழங்குகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் திட்டங்களை வரவேற்று எட்டு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் டிரம்பின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.