ஊழலை பிரதமர் மோடி சகித்து கொள்ள மாட்டார்: மத்திய அமைச்சர் பேட்டி
ஊழலை பிரதமர் மோடி சகித்து கொள்ள மாட்டார்: மத்திய அமைச்சர் பேட்டி
ADDED : பிப் 05, 2024 11:04 AM

புதுடில்லி: ‛‛ ஊழலை ஒரு போதும் பிரதமர் மோடி சகித்து கொள்ள மாட்டார்'' என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அர்ஜூன் ராம் மேக்வால் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி திட்டங்களை வகித்து வருகிறார். அதில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏழைகளுக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களால், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து விரைவில் முழு விபரம் தெரியவரும். இது மத்திய அரசின் பிரச்னை மட்டும் அல்ல. அரசியல் சாசனம் உருவாக்கப்படும் போது கூட இதைப் பற்றி விவாதித்துள்ளனர். தற்போது இந்த விஷயம் பரிசீலனையில் உள்ளது. இந்திய சட்ட ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.
ஊழலை ஒரு போதும் பிரதமர் மோடி சகித்து கொள்ள மாட்டார். விசாரணைக்கு நேரில் வருமாறு முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை பல முறை அழைப்பு விடுத்து இருந்தது. ஊழலில் ஈடுபடாமல் இருந்தால், அவர் நீண்ட நாட்களுக்கு முன்பே விசாரணைக்கு ஆஜர் ஆகி இருக்கலாம்.
அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.,வில் சேர சொல்வதாக பொய் சொல்கிறார். அவருக்கு மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் தொடர்பு இருக்க வேண்டும். அதனால்தான் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. அவங்களோட அமைச்சர்கள் பல நாட்களாக ஜெயிலில் இருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதாவது விஷயம் சீரியஸ். இவ்வாறு அவர் கூறினார்.

