இத்தாலி பிரதமர் மெலோனி புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி; சிறந்த தேசபக்தர் என பாராட்டு
இத்தாலி பிரதமர் மெலோனி புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி; சிறந்த தேசபக்தர் என பாராட்டு
ADDED : செப் 29, 2025 06:29 PM

புதுடில்லி: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதை புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளார். 'ஐ ஆம் ஜார்ஜியா - மை ரூட்ஸ், மை பிரின்சிபிள்ஸ்' என்ற அந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய மோடி, மெலோனியை சிறந்த தேசபக்தர் என்று புகழ்ந்துள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவருக்கும் பிரதமர் மோடிக்கும் சிறந்த நட்பு உண்டு. ஜி 7 மாநாடு உட்பட உலக நாடுகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இத்தாலி பிரதமரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது வழக்கம்.
எப்போதுமே இவர்களது சந்திப்பு முக்கியமான ஒன்றாக தான் இருக்கும். இருவரும் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரவேற்பை கூட பெற்று இருக்கிறது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதை புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளார். 'ஐ ஆம் ஜார்ஜியா - மை ரூட்ஸ், மை பிரின்சிபிள்ஸ்' என்ற அந்தபுத்தகத்தின் இந்திய பதிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
மெலோனியின் புத்தகத்துக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள முன்னுரையில் கூறியிருப்பதாவது: இந்தப் புத்தகம் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் மன் கி பாத் (பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ வாயிலாக பேசும் நிகழ்ச்சி தான் மன் கி பாத்). இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைக்கும் பொது வாழ்க்கைக்குமான ஒரு தொடர்பை விளக்குகிறது.
மெலோனி சிறந்த தேசபக்தர், சிறந்த சமகாலத் தலைவர். அவருக்கு என் மரியாதையையும், பாராட்டையும், நட்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.கடந்த 11 ஆண்டுகளாக உலகத் தலைவர்களுடனான எனது தொடர்பின் மூலம் அறிந்துகொண்டதில் முக்கியமானது.
பிரதமர் மெலோனியின் வாழ்க்கையும் தலைமைத்துவமும் காலத்தால் அழியாத உண்மைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த புத்தகம் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெறும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எப்போதுமே சிறந்த நட்பு
கடந்த ஜூன் மாதம் ஜி - 7' மாநாட்டுக்கு வந்த, ஐரோப்பிய நாடான, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவரை சந்தித்ததும் மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கிய மெலோனி, 'நீங்கள் தான் 'பெஸ்ட்'; உங்களைப் போல மாற நான் முயற்சி செய்கிறேன்' என, கூறி சிரித்தார்.
அப்போது, பிரதமர் மோடியும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பொதுவாக, மோடி - மெலோனி சந்திப்பு இணையத்தில் எப்போதும் பேசுபொருளாக இருக்கும்.
அதேபோல 2024ம் ஆண்டு இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கொண்ட, 'செல்பி' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் அன்றைய தினம் முழுவதும் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு பேசும் பொருளானது குறிப்பிடத்தக்கது.