தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்., முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

காங்., முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

காங்., முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

14


ADDED : நவ 22, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

14

ADDED : நவ 22, 2026 04:40 AM


14
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காங்., ஆளும் கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் சதீசன் ஆகியோர், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தங்கள் மாநிலங்களுக்கான வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என, சமீபத்தில் கேட்டுக்கொண்டனர். இவர்களிடம் தனித்தனியாக, ஐந்து நிமிடங்கள் பேசினாராம் பிரதமர்.

'காங்., ஒரு பிரதான எதிர்க்கட்சி. ஆனால், உங்கள் தலைவர் ராகுலின் செயல்பாடுகள் சரியில்லை. கட்சியில் பல சீனியர்கள் உள்ளனர். அவர்களாவது ராகுலுக்கு ஆலோசனை சொல்லலாமே. நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா' எனக் கேட்டதோடு, 'கட்சிக்குள் நகர்ப்புற நக்சல்கள் வந்துவிட்டனர். அவர்களால் தான் காங்கிரசுக்கு இந்த நிலைமை' என்றாராம் மோடி.

ரேவந்த் ரெட்டி எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டாராம். சதீசன் ஒரு புன்னகையுடன் நிறுத்திக் கொண்டாராம். ஆனால், கர்நாடக முதல்வர் சிவகுமாரோ மனம் திறந்து பேசினாராம். 'கட்சியின் சீனியர்களை ராகுல் இப்போது கண்டுகொள்வதில்லை. இளைஞர்கள் தான் எதிர்காலம் என்கிறார். அது சரி, அதேசமயம் அனுபவம் வாய்ந்த சீனியர்களின் அறிவுரைகளையும் கேட்க வேண்டும். நாங்கள் என்ன சொல்வது' என அலுத்துக் கொண்டாராம் சிவகுமார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us