தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வாரணாசியில் பிரதமர் மோடி 'ஹாட்ரிக்' வெற்றி

வாரணாசியில் பிரதமர் மோடி 'ஹாட்ரிக்' வெற்றி

வாரணாசியில் பிரதமர் மோடி 'ஹாட்ரிக்' வெற்றி


UPDATED : ஜூன் 04, 2024 05:16 PM

ADDED : ஜூன் 04, 2024 05:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2024 05:16 PM ADDED : ஜூன் 04, 2024 05:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாரணாசி: வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ., சார்பில் களமிறங்கி உள்ள பிரதமர் மோடி 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று (ஜூன் 4) ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக ஓட்டுகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை தன்வசப்படுத்தினார். இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் அதிகம்.

வாரணாசி தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட்டு, பிரதமர் மோடி 'ஹாட்ரிக்' வெற்றிப்பெற்றதை பா.ஜ., தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பிரதமர் மோடி, இம்முறை 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளார். இன்று இரவு 7 மணியளவில் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகம் வரும் பிரதமர் மோடி, 3வது முறையாக ஆட்சியமைப்போம் என சூளூரைக்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us