பெல்ஜியம் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை
பெல்ஜியம் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை
UPDATED : மார் 27, 2024 12:19 PM
ADDED : மார் 27, 2024 11:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பெல்ஜியம் பிரதமர் அலெக்ஸாண்டர் டீக்ருவுட்வுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார் பிரதமர் மோடி.
பெல்ஜியம், தலைநகர் பிரசெல்ஸ் நகரில் முதன்முறையாக அணுசக்தி உச்சி மாநாடு நடைபெறுகிறது. முதன்முறையாக இம்மாநாட்டை பெல்ஜியம் நடத்துகிறது.
இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நேற்று பிரதமர் மோடி பெல்ஜியம் பிரதமர் அலெக்ஸாண்டர் டீக்ருவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநாடு வெற்றியடைய மோடி வாழ்த்தினார். தொடர்ந்து இரு நாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, நட்புறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.இரு நாட்டு பிரமதர்களும் தங்களின் உரையாடல் அனுபவங்களை ‛ எக்ஸ்' வலைதளத்தில் பதிவேற்றினர்.

