sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆம் ஆத்மியிடம் இருந்து டில்லிக்கு விடுதலை: பிரதமர் மோடி

/

ஆம் ஆத்மியிடம் இருந்து டில்லிக்கு விடுதலை: பிரதமர் மோடி

ஆம் ஆத்மியிடம் இருந்து டில்லிக்கு விடுதலை: பிரதமர் மோடி

ஆம் ஆத்மியிடம் இருந்து டில்லிக்கு விடுதலை: பிரதமர் மோடி

6


UPDATED : பிப் 08, 2025 09:17 PM

ADDED : பிப் 08, 2025 07:21 PM

Google News

UPDATED : பிப் 08, 2025 09:17 PM ADDED : பிப் 08, 2025 07:21 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' ஆம் ஆத்மியிடம் இருந்து டில்லிக்கு விடுதலை கிடைத்துள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், இங்கு கிடைத்த வெற்றியானது வளர்ச்சி, கொள்கை, நம்பிக்கைக்கானது எனவும் தெரிவித்து உள்ளார்.

டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 48 தொகுதிகளை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ., தலைமையகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:*சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்.

*சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு எனது வணக்கங்கள்.

*தலைசிறந்த தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளித்து உள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

*தற்போது மக்கள் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து டில்லி விடுதலை பெற்றுள்ளது.

*இந்த வெற்றியில் ஒவ்வொரு பா.ஜ., தொண்டருக்கும் பங்கு உண்டு. அவர்கள் கடுமையாக உழைத்தனர்.

*இரட்டை இன்ஜின் அரசு டில்லியின் முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்கும். இரட்டை இன்ஜின் அரசு மீதான நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

*டில்லி இனிமேல் இரட்டை வேகத்தில் முன்னேறும்.

*மக்கள் எங்களுக்கு அளித்த அன்பை இரண்டு மடங்காக திருப்பித் தருவோம்.

*ஷார்ட்கட் அரசியல், ஷார்ட் சர்க்யூட் ஆகி விட்டது.

*லோக்சபா தேர்தலில் டில்லி மக்கள் என்னை எப்போதும் ஏமாற்றியது இல்லை. கடந்த 3 தேர்தல்களிலும் 7 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றது.

*லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சாதனை படைத்து இருந்தோம். தற்போது டில்லியிலும் படைத்துள்ளோம்.

*டில்லி என்பது சாதாரண நகரம் அல்ல. அது மினி இந்தியா.

*இனிமேல் டில்லி இளைஞர்கள் சிறந்த நிர்வாகத்தை உணர்வார்கள்.

*பன்முகத்தன்மை வாய்ந்த டில்லி, இந்த வெற்றி மூலம் பா.ஜ.,விற்கு ஆசி வழங்கி உள்ளது.

*டில்லியில் அராஜகம் மற்றும் அகங்காரத்திற்கு மக்கள் முடிவு கட்டி உள்ளனர்.

*நானும் பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டவன் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இப்பகுதி மக்கள் பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து உள்ளனர். டில்லியில் ஒவ்வொரு மூலையிலும் தாமரை மலர்ந்துள்ளது.

*இது சாதாரண வெற்றி அல்ல. மோடியின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

*அனைத்து தரப்பு மக்களும் பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து உள்ளனர்.

*டில்லி மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.

*தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும் மாநிலங்கள், வளர்ச்சியில் உச்சம் பெற்றுள்ளன.

* டில்லியில் கிடைத்த வெற்றி என்பது கொள்கை, வளர்ச்சி, நம்பிக்கைக்கானது.

*ஊழலுக்கும், அரசியலில் பொய்க்கும் இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

* வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த மிகப்பெரிய தடையை அகற்றி உள்ளீர்கள். ஆம் ஆத்மி அரசு டில்லி மெட்ரோ பணிகளை தடுத்தது. ஆயுஷ்மான் பாரத் பலன்கள் மக்களை சென்றடைவதை தடுத்தது.

* நிர்வாகம் என்பது நாடகத்திற்கான மேடை அல்ல. டில்லியில் முன்னேற்றத்திற்காக உழைப்போம். தே.ஜ., எங்கு எல்லாம் உள்ளதோ அங்கு எல்லாம் வளர்ச்சி, நம்பிக்கை, சிறந்த நிர்வாகம் இருக்கும் என்பதை ஒட்டு மொத்த நாடும் அறியும்.

*இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கு பா.ஜ., செய்த வளர்ச்சி பணிகள் மட்டுமே காரணம்.

* மோடியின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது.

* நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

* ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் முடிவு கட்டி வருகிறது. அக்கட்சிகளின் திட்டங்கள் மற்றும் ஓட்டுவங்கியை திருடுகிறது. காங்கிரசுடன் கைகோர்க்கும் கட்சிகளுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

*ஜாதி எனும் விஷத்தை காங்கிரஸ் நாடு முழுதும் பரப்பி வருகிறது.

*தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைவதுடன் மட்டும் அல்லாமல், கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்கிறது.

*இனிமேலும் காங்கிரசை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.

*ஆறு தேர்தல்களில் எதிலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை.

*பூஜ்ஜியம் எடுப்பதில் அக்கட்சி ஹாட்ரிக் சாதனை படைத்து உள்ளது.

*ஊழலுக்கு எதிரானவர்கள் ஊழலில் திளைத்து வருகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us