வாரணாசியில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ': காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு
வாரணாசியில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ': காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு
UPDATED : மே 13, 2024 08:17 PM
ADDED : மே 13, 2024 05:58 PM

வாரணாசி: வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 13) அங்கு 'ரோடு ஷோ' நடத்திய பின் காசிவிஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் இம்முறையும் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இங்கு 7வது கட்டமாக வரும் ஜூன் 1ல் ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (மே 14) கடைசி நாள். இதனையடுத்து பிரதமர் மோடி நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக இன்றும், நாளையும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதன் ஒருபகுதியாக, வாரணாசியில் இன்று பிரதமர் மோடி 'ரோடு ஷோ' நடத்தினார். வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரோடு ஷோ நடைபெறுகிறது. இதில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று அங்கு பூஜை செய்து வழிபட்டார். மோடியுடன் உபி..முதல்வர் யோகி ஆதி்த்யநாத்தும் உடனிருந்தார்.