''பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை பரமாத்மா என்னை கொண்டு வந்தார்'': மோடி உணர்ச்சி பேச்சு
''பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை பரமாத்மா என்னை கொண்டு வந்தார்'': மோடி உணர்ச்சி பேச்சு
UPDATED : மே 22, 2024 05:11 PM
ADDED : மே 22, 2024 11:56 AM

புதுடில்லி: ''நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை, என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்'' என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதாவது: என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன்.
என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

