பிரதமர் மோடி 4 நாள் பயணம்; கனடாவில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!
பிரதமர் மோடி 4 நாள் பயணம்; கனடாவில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!
UPDATED : ஜூன் 14, 2025 01:42 PM
ADDED : ஜூன் 14, 2025 01:17 PM

புதுடில்லி: பிரதமர் மோடி நாளை (ஜூன் 15) முதல் 4 நாள் அரசு முறை பயணமாக கனடா, சைப்ரஸ் நாடுகளுக்கு செல்கிறார். கனடாவில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. இந்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு கனடாவில் வரும் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடக்கிறது. ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி நாளை (ஜூன் 15) முதல் 4 நாள் அரசு முறை பயணமாக கனடா, சைப்ரஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த உச்சிமாநாட்டில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை உள்ளிட்ட முக்கியமான உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

