வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மோடி அறிவிப்பார்: உறுதியாகச் சொல்கிறார் ராகுல்
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மோடி அறிவிப்பார்: உறுதியாகச் சொல்கிறார் ராகுல்
ADDED : ஆக 10, 2024 06:52 AM

புதுடில்லி: 'வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார்' என சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் பதிவிட்டுள்ளார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு இன்று (ஆகஸ்ட் 10) நேரில் சென்று, பிரதமர் மோடி ஆறுதல் கூற உள்ளார். மதியம் 12.15 மணிக்கு பேரழிவால் பாதிக்கப்பட்ட இடங்களை மோடி பார்வையிடுகிறார். பின்னர் அவர், நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனையில் இருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மோடி நேரில் சந்திக்கிறார்.
தேசிய பேரிடர்
இந்நிலையில் எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், ''பிரதமர் மோடி பயங்கர சோகத்தை நேரில் ஆய்வு செய்ய, வயநாட்டிற்கு வர முடிவு செய்திருப்பதற்கு நன்றி. இது ஒரு நல்ல முடிவு. அவர் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார்'' என கூறியுள்ளார்.