ADDED : செப் 28, 2024 12:59 AM

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு நடிகையை ஹோட்டல் அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக, மலையாள முன்னணி நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், சித்திக் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, கேரள உயர் நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் தலைமறைவானார்.
அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சித்திக்கை கண்டுபிடிப்பதற்காக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் மலையாளம் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுஉள்ளது.
படத்தில் காணப்படும் நடிகர் சித்திக், பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும் விபரம் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, கேரள திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.