தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ போலீசில் சிக்கிய ரவுடி கூட்டாளியுடன் கைது

 போலீசில் சிக்கிய ரவுடி கூட்டாளியுடன் கைது

 போலீசில் சிக்கிய ரவுடி கூட்டாளியுடன் கைது


ADDED : பிப் 06, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி :அவுட்டர் நார்த் டில்லி பகுதியில், பிரபல ரவுடி ஒருவரையும், அவரின் கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷாபாத் டயரி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், பல குற்றங்களை செய்த பங்கஜ் என்ற சுரா, 28, என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

ஜாமினில் வெளியே வர முடியாத கோர்ட் வாரன்ட் அவர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவரை தேடி வந்த போலீசார், ஷாபாத் டயரி பகுதியில் பதுங்கியிருப்பதாக அறிந்தனர்.

அந்த பகுதியை நேற்று முன்தினம் இரவில் சுற்றி வளைத்த போலீசார், பங்கஜையும், அவருடன் சென்ற ரவுடி ஆகாஷ், 24, என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

கைதாகியுள்ள பங்கஜ் மீது, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் ஆள் கடத்தல், கொலை முயற்சி, போலீசார் மீது தாக்குதல் வழக்குகளும் அடக்கம்.

கைது செய்தப்பட்டவர்களின் தொடர்புகளை ஆராய்ந்து வரும் போலீசார், அவர்கள் இருவர் மீது மகோகா சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us