ADDED : மார் 13, 2024 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குருகிராம்,:புதுடில்லி அருகே கிளப்பில் பெண்ணிடம் சில்மிஷம் செய்து, தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடுகின்றனர்.
ஹரியானா மாநிலம் குருகிராம் 102வது செக்டாரில் வசிக்கும் பெண், தன் கணவருடன் 40வது செக்டாரில் உள்ள கிளப்புக்கு 10ம் தேதி இரவு சென்றார்.
அங்கு, அந்த பெண் நடனம் ஆடிக் கொண்டிருந்த போது, அவரைச் சூழ்ந்த நான்கு ஆண்கள், சில்மிஷம் செய்துள்ளனர். அதைத் தட்டிக்கேட்ட அவரது கணவர் மற்றும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கி விட்டு தப்பினர்.
இதுகுறித்து, அந்த பெண் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், கிளப்பில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

