'சார்' என்று அழைக்காத பிரச்னை: கொரியர் ஊழியரை மிரட்டிய போலீஸ் அதிகாரி
'சார்' என்று அழைக்காத பிரச்னை: கொரியர் ஊழியரை மிரட்டிய போலீஸ் அதிகாரி
UPDATED : மார் 05, 2025 04:11 PM
ADDED : மார் 05, 2025 04:06 PM

யவத்மால்: 'சார்' என்று அழைக்காததால் தன்னை மிரட்டிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொரியர் நிறுவன ஊழியர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி உள்ளது.
மஹாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஆர்னி நகரில் உள்ள கூரியர் நிறுவன ஊழியர் தீரஸ் கெடம் பார்சலை டெலிவரி செய்வது தொடர்பாக தொலைபேசியில் வாடிக்கையாளரிடம் பேசி உள்ளார்.
அப்போது அந்த வாடிக்கையாளர், நான் ஒரு போலீஸ் அதிகாரி என்னை சார் என்று கூப்பிட மாட்டாயா என்று கேட்டு மிரட்டி உள்ளார்.இந்த சம்பவம் பிப்ரவரி 23 அன்று நடந்தது.
சம்பவம் குறித்து தீரஸ் கெடம் கூறியதாவது:
நான் ஒரு உள்ளூர் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிகிறேன், வாடிக்கையாளர்களுக்கு பார்சல்களை வழங்குவது தான் எனது பணி.
பார்சல்களை டெலிவரி செய்வதற்கு முன், நாங்கள் அழைத்து பெறுநர்களின் பெயர்களை உறுதிப்படுத்துகிறோம். அதன்படி, பார்சலில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரை கணக்கிட இந்த வாடிக்கையாளரை அழைத்தேன். இருப்பினும், அவர் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார், மேலும் என்னையும் அலுவலக ஊழியர்களையும் மிரட்டினார்.
சார் என்று கூப்பிடாததற்காக இவ்வாறு என்னை மிரட்டுகிறார்.
சட்ட ஆலோசனையை பெற்று, விரைவில் போலீசில் புகார் அளிப்பேன்.
இவ்வாறு தீரஸ் கெடம் கூறினார்.