தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சபரிமலை தங்கம் மாயமான விவகாரம்: தந்திரியிடம் போலீஸ் விசாரணை

 சபரிமலை தங்கம் மாயமான விவகாரம்: தந்திரியிடம் போலீஸ் விசாரணை

 சபரிமலை தங்கம் மாயமான விவகாரம்: தந்திரியிடம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 30, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து தங்கம் மாயமான விவகாரத்தில், தந்திரி மகேஷ் மோகனரருவிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 2019ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடந்தன.

அப்போது தங்க முலாம் பூசுவதற்காக கருவறையின் இருபுறமும் இருந்த துவாரபாலகர் சிலைகளில் அணிவிக்கப்பட்ட தங்க கவசமும், கருவறை கதவின் தங்க கவசமும் கழற்றப்பட்டன.

தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும் போது, துவாரபாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இது தொடர்பாக தனித்தனியே இரு வழக்குகளை பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

முக்கிய குற்றவாளியாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர்கள் இருவர் என, இதுவரை ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன், சபரிமலை தந்திரி மகேஷ் மோகனரருவிடமும், தங்கம் திருடு போன விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக கோவிலில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால், தந்திரி தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும். அதன் பிறகே, அந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி 2019ம் ஆண்டில் தங்க கவசம் கழற்றப்பட்டபோது தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதா? தந்திரிக்கும், உன்னிகிருஷ்ணன் போத்திக்கும் இடையிலான தொடர்பு, பல்லாரியை சேர்ந்த நகை வியாபாரி கோவர்தனை சந்தித்ததற்கான காரணம் ஆகியவை குறித்து தந்திரி மோகனரருவிடம் அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.

இதேபோல் தந்திரி கண்டரரு ராஜீவரருவிடமும் புலனாய்வு அதிகாரிகள் வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே விசாரணை நடத்திஉள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us