ADDED : மார் 18, 2025 04:58 AM

ஆடுகோடி: மாயமானதாக தேடப்பட்ட, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பெங்களூரில் ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றியவர் முபாரக் சிக்கந்தர், 36. இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 2ம் தேதி காடுகோடியில் உள்ள வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின், வீட்டிற்கு திரும்பவில்லை.
மொபைல் போனை வீட்டில் வைத்துச் சென்றிருந்தார். முபாரக் மாயமானதாக குடும்பத்தினர் அளித்த புகாரில், ஆடுகோடி போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் ஆடுகோடி பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் சென்று பார்த்தபோது, உடல் அழுகிய நிலையில் ஒருவர் துாக்கில் தொங்கி காணப்பட்டார்.
அவர் அணிந்திருந்த உடைகள், அடையாளத்தை வைத்து விசாரித்தபோது, மாயமான முபாரக் சிக்கந்தர் என்பதும், அவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்ததும் தெரிந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.