ADDED : பிப் 18, 2025 09:44 PM
ஆக்ரா:உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில், மனைவியை கத்தியால் குத்திக் கொன்றவரை போலீசார் தேடுகின்றனர்.
உ.பி., மாநிலம் ஆக்ரா ராதத் நகர் அருகே பாக்கிண்ணி கிராமத்தில் வசிப்பவர் கேசவ். இவரது மனைவி ராதா,32. தம்பதி இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கத்தியால் ராதாவின் கழுத்து மற்றும் வயிற்றில் கேசவ் சரமாரியாக குத்தினார். ரத்தவெள்ளத்தில் சரிந்த ராதா, அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மனைவி இறந்தவுடன் கேசவ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
கிராம மக்கள் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார், ராதா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கேசவை தேடி வருகின்றனர்.
ராதா சகோதரர் நீரஜ் கூறுகையில், “குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கேசவ் தகாத உறவு வைத்திருந்தார். அதை ராதா கண்டித்தார். இதையடுத்து குஜராத் பெண் தூண்டுதலில்தான் ராதாவை கேசவ் கொலை செய்துள்ளார்,”என்றார்.

