தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மோதலில் ஈடுபட்ட கும்பல் தாக்கி போலீஸ்காரர் காயம்

மோதலில் ஈடுபட்ட கும்பல் தாக்கி போலீஸ்காரர் காயம்

மோதலில் ஈடுபட்ட கும்பல் தாக்கி போலீஸ்காரர் காயம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குருகிராம்: குருகிராம், போண்ட்ஸி பகுதியில் உள்ள சிறைச்சாலை சாலையில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலை தடுக்க சென்ற சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த போலீஸ்காரர் காயமடைந்தார்.

போண்ட்ஸி பகுதியில் நேற்று முன் தினம் இரவு சிறைச்சாலை சாலை சாலையில் இருக்குழுக்களுக்கு இடையே மோதல் நடந்தது. அப்போது சிறப்பு அதிரடிப்படையினர், தங்களின் அரசு வாகனத்தில், போண்ட்ஸி பகுதியில் உள்ள தலைமையகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். திடீரென, மோதலில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவினர், அவர்களின் வாகனத்தில் தப்பிச் சென்றனர். இன்னொரு குழுவினர், சிறப்பு அதிரடிப்படையினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், அமித் குமார் என்ற போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

தகவல் அறிந்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள், சிறப்பு அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய குழுவினர் அங்கிருந்து தப்பியோடினர்.

காயமடைந்த போலீஸ்காரரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க, தீவிர வேட்டையில் ஈடுபட்டுளளளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us