ADDED : பிப் 06, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் துப்பாக்கி குண்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள டல்ஹவுசி பகுதியில், சிட்டி சிவில் நீதிமன்றம் செயல்படுகிறது.
இங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் நேற்று காலை நெற்றியில் துப்பாக்கி குண்டு காயத்துடன் கீழ்தளத்தில் உள்ள படிக்கட்டு அருகே நாற்காலியில் சடலமாக கிடந்தார்.
அவர் அருகே அவரது பணி துப்பாக்கி கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.