எதிர்க்கட்சிகள் போராட்டம்: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை
எதிர்க்கட்சிகள் போராட்டம்: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : செப் 18, 2024 08:03 AM

புதுச்சேரி: எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆகஸ்ட் 16ம் தேதியில் இருந்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை வாபஸ் பெற கோரி, இன்று எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தன. இந்நிலையில் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, விடுமுறை அறிவிப்பு வெளியிடுவதாக நேற்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் இன்று (செப்.18) முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளன. பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்ற அத்யாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.'பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்று புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
