ADDED : ஜன 16, 2025 06:27 AM
தங்கவயல்: தங்கவயல் தமிழ்ச்சங்கம் சார்பில், தமிழர் பண்பாட்டு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.
தங்கவயல் உரிகம் அம்பேத்கர் சாலையில் உள்ள தமிழ்ச்சங்க வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் மதியழகன் வரவேற்றார்.
தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் முன்னிலையில், கமல் முனிசாமி தலைமை வகித்தார். நாராயணமூர்த்தி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். திருக்குறள் ஓதினர்.
தமிழ்க் கொடியை பேராசிரியர் கிருஷ்ணகுமாரும், திருவள்ளுவர் கொடியை டாக்டர் இங்கர்சாலும் ஏற்றி வைத்தனர். திருவள்ளுவர் சிலைக்கு தர்மன் முனிசாமி மாலை அணிவித்தார்.
தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார், கே.ராஜேந்திரன், நுாரி சாஸ்தா ஆகியோர் தமிழ்த்தாய் தேரை இழுத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
வக்கீல்கள் சங்க தலைவர் ராஜகோபால் கவுடா, வக்கீல்கள் ஜோதிபாசு, மணிவண்ணன், மகேந்திரன், டாக்டர் அறிவழகன், கிராம பஞ்சாயத்து தலைவர் டாக்டர் சுரேஷ் குமார், விளையாட்டு வீரர் கருணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்த்தாய் தேர் உலாவை ஏ.ஜெயசீலன், அகஸ்டின், கோவலன், சம்பத், இருதயராஜ் ஆகியோர் வழிநடத்தி சென்றனர். கிராமிய கலைஞர்களின் மயிலாட்டம், குயிலாட்டம், பொம்மலாட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் இளைஞர்களின் குத்தாட்டமும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் திருமுருகன், எஸ்.அன்பரசன், தீபம் சுப்ரமணியம், நடராஜன், எல்.கருணாகரன், முருகன், ஆர்.வி.குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

