ஒயிட்பீல்டு பிரஸ்டீஜ் சாந்திநிகேதன் குடியிருப்பில் இன்று பொங்கல் விழா
ஒயிட்பீல்டு பிரஸ்டீஜ் சாந்திநிகேதன் குடியிருப்பில் இன்று பொங்கல் விழா
UPDATED : பிப் 08, 2025 11:58 AM
ADDED : பிப் 08, 2025 06:43 AM

ஒயிட்பீல்டு: ஒயிட்பீல்டு பிரஸ்டீஜ் சாந்திநிகேதன் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பொங்கல் கொண்டாட்டம் நடக்கிறது.
பெங்களூரு ஒயிட்பீல்டில் பிரஸ்டீஜ் சாந்திநிகேதன் எனும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. பல மாநிலங்களைச் சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தமிழர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடியிருப்பு வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பத்தாம் ஆண்டு விழாவை, 'வணக்கம் தமிழா' குழுவினர் இன்று மாலை 4:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை நடத்துகின்றனர்.
நடப்பாண்டு, 'சிங்கார சென்னை' எனும் கருப்பொருளில் நடக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நேப்பியார் பாலம், ஐ லவ் சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என, சென்னையை பிரதிபலிக்க கூடிய இடங்கள் ஆகியவை, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாடகி ரக் ஷிதா சுரேஷ் இசை நிகழ்ச்சி நடக்கிறது. உணவகங்கள், அணிகலன், விளையாட்டு பொருட்கள் கடைகள் அமைக்கப்பட உள்ளன.
இது மட்டுமின்றி, நாளை மதியம், வாழை இலையில் தமிழர் மரபு உணவுகள் பரிமாறப்பட உள்ளன.
வணக்கம் தமிழா குழுவின் அருணகிரி, சுபாஷினி, கவிதா திலீப், சதீஷ், ரெங்கசாமி, ஷாந்தி குரு, அபர்ணா சதீஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.