நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கதக்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, ஹுனசிகட்டி கிராமத்தில் மசூதியில் பூஜைகள், ஹோமங்கள் நடத்தி மத ஒற்றுமையை பிரதிபலித்தனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பிக்கும் வகையில், ஹிந்துக்கள் மட்டுமின்றி, முஸ்லிம்களும் கூட பூஜைகள் நடத்தி கொண்டாடினர்.
கதக், நர்குந்தின், ஹுனசேகட்டி கிராமத்தில் உள்ள மசூதியில், நேற்று சிறப்பு பூஜை, ஹோமம் நடத்தப்பட்டது.
இதில் கிராமத்தினரும் பங்கேற்றனர். ருத்ராபிஷேகம் நடத்தி, இந்திய தாய் உருவப்படம் முன், கலசம் வைத்து புஷ்பார்ச்சனை செய்தனர். இது மத ஒற்றுமைக்கு உதாரணமாக இருந்தது.
கதக், லட்சுமேஸ்வராவில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள், ஹோமம் நடந்தது. ஹோமம் செய்தபோது, குரங்கு ஒன்று அங்கு வந்தது. ஹோமம் முடியும் வரை, அங்கேயே இருந்து மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

