ADDED : டிச 07, 2024 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில் 3 நாட்களாக மிதமான நிலையில் இருந்த காற்றின் தரம் நேற்று மாலை மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றது.
காற்றின் தரக்குறியீடு நேற்று மாலை 4:00 மணிக்கு 233ஆக பதிவாகி இருந்தது. இதுவே, நேற்று முன் தினம் 197 ஆக இருந்தது.
இன்றும் நாளையும் காற்றின் தரம் மோசமான நிலையிலேயே நீடிக்கும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கணித்துள்ளது. அதே நேரத்தில், நாளை மறுநாள் மிகவும் மோசமான நிலைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.