நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியில் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலைக்குச் சென்றது.
தலைநகர் டில்லியில் வெப்பநிலை நேற்று, 36.4 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் இயல்பை விட 2.4 டிகிரி அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக மிதமான நிலையில் இருந்த காற்றின் தரக்குறியீடு நேற்று மாலை 4:00 மணிக்கு 217ஆக பதிவாகி இருந்தது. இது,மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
இன்று பகலில் பலத்த காற்று வீசும்; வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

