தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மோசமான நிலையில் காற்று மாசு

மோசமான நிலையில் காற்று மாசு

மோசமான நிலையில் காற்று மாசு


ADDED : நவ 25, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தலைநகர் டில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து, 11-வது நாளாக மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. சராசரி காற்று தரக்குறியீடு நேற்று, 220 ஆக பதிவாகி இருந்தது.

டில்லியில், அக்டோபர் மாதத்தில் இருந்தே காற்று மாசு அதிகரித்து வருகிறது. நவம்பர் முதல் வாரத்தில், மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற காற்று மாசு, தீபாவளி பண்டிகையை ஒட்டி, 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அபாயகரமான நிலையை அடைந்தது.

இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காற்று மாசு சற்று குறைந்து, மிகவும் மோசமான நிலை --– மோசமான நிலை என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

டில்லியில் உள்ள, 58 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், 30 இடங்களில் காற்றின் தரம் மோசமான நிலையில் நேற்று பதிவாகி இருந்தது. நான்கு நிலையங்களில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மீதமுள்ள 24 நிலையங்களில் மிதமான நிலை நீடிக்கிறது. இதில், ஆனந்த் விஹாரில் காற்று தரக்குறியீடு, 357ஆக பதிவாகியுள்ளது.

கடந்த, 15ம் தேதி 290ஆக இருந்த சராசரி காற்று தரக்குறியிடு, 16-ம் தேதி 275 ஆக குறைந்தது. நவம்பர் 17-ம் தேதி 204ஆகவும், 18-ல் 232ஆகவும், 19-ல் 280ஆகவும், 20-ல் 270ஆகவும், 21-ல் 265 ஆகவும், 22-ல் 239ஆகவும், 23-ல் 260ஆகவும், நேற்று முன் தினம் 227ஆகவும் பதிவாகி இருந்தது. நேற்று 220 ஆக குறைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் புகையே காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அதேநேரத்தில், அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வைக்கோலை எரிப்பதாலும் டில்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. அதேபோல, டில்லி மாநகரில் தினமும் உருவாகும் குப்பைகள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் மின்னணுக் கழிவுகளை எரிப்பதாலும் காற்று மாசு உச்சத்துக்கு செல்கிறது.

டில்லியில் நாளை வரை காற்று மாசு மோசமான நிலையிலேயே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நாளை மறுநாள் மிகவும் மோசமான நிலையை அடையும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பநிலையியும் வெகுவாக சரிந்து டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் குளிர் அதிகரித்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us