போப் பிரான்சிஸ் மறைவு: இந்தியாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு
போப் பிரான்சிஸ் மறைவு: இந்தியாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு
ADDED : ஏப் 22, 2025 07:23 AM

புதுடில்லி: போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் நேற்று காலமானார். போப் பிரான்சிஸ் உடலை அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ''துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்; அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது'' என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு
போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
போப் மறைவை ஒட்டி, இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் .தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுவதுடன், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.