ADDED : நவ 06, 2024 01:03 AM

புதுடில்லி, பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான சாரதா சின்கா, 72, உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீஹாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர்.
இவர், போஜ்புரி மற்றும் மைதிலி ஆகிய மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு சாரதா சின்ஹாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார்.
இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர் ரிமா கூறுகையில், “புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டு வந்த சாரதாவுக்கு, பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
''தற்போது, செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
இதற்கிடையே, சாரதா சின்ஹாவின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் தன் சமூக வலைதளத்தில், 'பாடகி சாரதா சின்ஹா, விரைவில் நலம்பெற்று வர இறைவனை பிராத்திக்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.