ADDED : பிப் 15, 2025 11:37 PM

அறிவியல் துறையில் வளர்ச்சி மற்றும் அரசின் பயனுள்ள செயல்பாடுகள் இருந்தாலும், நரபலி மற்றும் மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இது, சமூகத்தில் அறிவியல் மனப்பான்மை வளரவில்லை என்பதை காட்டுகிறது. இதற்கு அறிவியலை பிரபலப்படுத்துவதே மிகச் சிறந்த வழி.
பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
எப்போது மாநில அந்தஸ்து?
சரியான நேரத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மாநிலத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் மிகத் தெளிவாக வரையறுக்கப்படும். பிரதமரும், உள்துறை அமைச்சரும் கடந்த காலங்களில் இது குறித்து குறிப்பிட்டுள்ளனர். யூனியன் பிரதேசத்தில், தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற அரசு உள்ளது.
கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,
அமெரிக்காவுக்கு கண்டனம்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கைவிலங்குகளுடன் திருப்பி அனுப்பப்பட்ட விதம் மனித குலத்திற்கு ஏற்பட்ட கறை. இது போன்ற மனப்பான்மையை, செவ்விந்தியர்கள் மற்றும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மீதும் அமெரிக்க அரசு பல முறை காட்டியுள்ளது.
உமா பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

