தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 130 பேரை கடத்த வெறிநாய் 7 மணி நேரத்திற்கு பின் 'சிறை'

130 பேரை கடத்த வெறிநாய் 7 மணி நேரத்திற்கு பின் 'சிறை'

130 பேரை கடத்த வெறிநாய் 7 மணி நேரத்திற்கு பின் 'சிறை'


UPDATED : ஆக 10, 2026 11:36 PM

ADDED : ஆக 10, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 11:36 PM ADDED : ஆக 10, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தானே:மஹாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில், தெருநாய் ஒன்று ஏழு மணி நேரத்தில் 130 பேரை விரட்டி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாணில், தெருநாய் ஒன்று நேற்று முன்தினம் திடீரென ஆக்ரோஷம் அடைந்து, அப்பகுதியில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடிக்க துவங்கியது. இதனால் பீதியடைந்து மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

எனினும், கண்ணில்பட்டவர்களை எல்லாம் விரட்டிச் சென்ற அந்த வெறிநாய், ஏழு மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என 130 பேரை கடித்து குதறியது. பாதிக்கப்பட்ட அனைவரும் கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டது.

நாய்க்கடி பற்றி அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் 130 பேரை கடித்த வெள்ளை நிற வெறிநாயை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார், மாநகராட்சி கவுன்சிலர்கள் என பலரும் இணைந்து இரவு முழுதும் தேடினர். ஏழு மணி நேர தேடுதலுக்கு பின் நேற்று அதிகாலை 1:30 மணியளவில் அந்த நாய் பிடிபட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us