ரூ.500 லஞ்சம் தரமாட்டியா...? பாஸ்போர்ட் பக்கத்தை 'டர்'ரென கிழித்த போஸ்ட்மேன்
ரூ.500 லஞ்சம் தரமாட்டியா...? பாஸ்போர்ட் பக்கத்தை 'டர்'ரென கிழித்த போஸ்ட்மேன்
ADDED : அக் 20, 2024 09:05 PM

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் தர மறுத்ததால் இளைஞரின் பாஸ்போர்ட்டை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோவில் உள்ள ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. அந்த பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்டவருக்கு தர அங்குள்ள தபால்காரர் ரூ.500 லஞ்சமாக கேட்டார். பணத்தை தர அவர் மறுத்ததால் தபால்காரர் கோபம் கொண்டு பாஸ்போர்ட்டில் உள்ள முக்கிய பக்கம் ஒன்றை கிழித்துள்ளார்.
லஞ்சம் தர மறுத்து பாஸ்போர்ட் பக்கத்தை கிழித்ததால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டவர் இதுகுறித்த அங்குள்ள சிலருடன் சென்று தபால்காரரிடம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்டவருடன் வந்த சிலர், தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர். ஊரில் தபால் வரும் போது அதை ஒவ்வொருவருக்கும் தர இதே தபால்காரர் 100 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார் என்பது ஊர்மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
பாஸ்போர்ட் பக்கத்தை தபால்காரர் கிழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வீடியோவை ஆதாரமாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.