ADDED : ஜன 23, 2025 05:07 AM

பாகல்கோட்: “மாநிலத்தில் தேவையான அளவு மின்சாரம் உற்பத்தியாவதால், இம்முறை கோடை காலத்தில் மின்தடை இருக்காது,” என, மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து, பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் வறட்சி சூழ்நிலை இருந்தபோதே, மின் வெட்டு இருக்கவில்லை, இம்முறையும் மின் வெட்டு இருக்காது. தேவைக்கு தகுந்தபடி மின்சாரம் வினியோகிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. போதுமான அளவில் மின்சாரம் உற்பத்தியாவதால், மின் வெட்டு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஒருவேளை கோடை காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டால், வேறு மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவோம். இம்முறை கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
எந்த பிரச்னையும் இல்லாமல், மின்சாரம் வினியோகிக்க இப்போதிருந்தே நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு அணைகளில் போதுமான தண்ணீர் இருப்புள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தியும் திருப்திகரமாக உள்ளதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஆளுங்கட்சியில் எந்த குழப்பங்களும் இல்லை. குழப்பங்களை ஊடகங்களே உருவாக்குகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

