ADDED : ஜூலை 19, 2025 01:41 AM

எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம். பிற்போக்குத்தனமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஒரு பெண் முன்னேறும் போது, ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறுகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்
பூஸ்டர் டோஸ் தேவை!
நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக, சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த, 'பூஸ்டர் டோஸ்' போல அதிரடி நடவடிக்கை தேவை. மேலும், ஜி.எஸ்.டி.,யில் கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், வரி பயங்கரவாதம் முடிவுக்கு வரும்.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,
சும்மா விட மாட்டார்கள்!
'பெங்காலி' மொழி பேசும் முஸ்லிம்கள் பற்றியே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவலைப்படுகிறார். அவருக்கு ஹிந்துக்கள் மீது துளி கூட அக்கறை இல்லை. பெங்காலி முஸ்லிம்களுக்காக அவர் அசாமுக்கு வந்தால், ஹிந்து பெங்காலிகளும், மாநில மக்களும் அவரை சும்மா விட மாட்டார்கள்.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,