பராமரிப்பு பணிக்காக ஏப்.,18 வரை பிரகதி மைதான் சுரங்கப்பாதை மூடல்
பராமரிப்பு பணிக்காக ஏப்.,18 வரை பிரகதி மைதான் சுரங்கப்பாதை மூடல்
ADDED : மார் 20, 2024 11:18 PM
புதுடில்லி,:பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், புதுடில்லி பிரகதி மைதானம் சுரங்கப்பாதை ஏப்ரல் 18-ம் தேதி வரை இரவு நேரங்களில் மூடப்படும் என டில்லி மாநகர போலீஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகர போலீசின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுடில்லி பிரகதி மைதானம் சுரங்கப்பாதையில் டில்லி அரசின் பொதுப் பணித்துறை பராமரிப்பு பணிகளை செய்யவுள்ளது.
அதனால் வரும் 24, 31 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் இந்த சுரங்க பாதை நாள் முழுதும் மூடப்படும்.
மற்ற நாட்களில் ஏப்ரல் 18ம் தேதி வரை நள்ளிரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை சுரங்கப் பாதை மூடப்படும்.
பிரகதி மைதானம் சுரங்கப்பாதை மூடியிருக்கும் நேரத்தில் பொதுமக்கள் மாற்றுவழிகளில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
ரிங் ரோடு, பைரோன் ரோடு மற்றும் மதுரா ரோடு ஆகியவற்றை மாற்று வழிகளாக பயன்படுத்தலாம்.
மேலும், மாநகர பஸ் மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய பொதுப் போக்குவரத்தை அதிகபட்சமாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

