ADDED : ஜன 26, 2024 01:05 AM

புதுடில்லி,உச்ச நீதிமன்ற நீதிபதியாக, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே நேற்று பதவியேற்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் கடந்த மாதம் ஓய்வு பெற்றதையடுத்து, அப்பணியிடம் காலியாக இருந்தது.
இதன் காரணமாக, வழக்குகள் நிலுவையாகாமல் தடுக்கும் நோக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலேவின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இதை ஏற்று, உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர், நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, நீதிபதி பிரசன்னா பி வரலேவுக்கு, புதுடில்லியில் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் வாயிலாக, உச்ச நீதிமன்றம், தன் முழு பலமான 34 நீதிபதிகளுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

