ADDED : ஜன 08, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா :பீஹாரில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜன் சூராஜ் என்ற கட்சியை துவக்கி உள்ளார்.
இங்கு கடந்த டிசம்பரில் நடந்த அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக, பாட்னாவில் கடந்த 2ம் தேதி, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை பிரசாந்த் கிஷோர் துவக்கினார்.
அவரை, போலீசார் நேற்று முன்தினம் காலையில் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.