பிரவீன் நெட்டார் கொலை வழக்கு 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ., 'ரெய்டு'
பிரவீன் நெட்டார் கொலை வழக்கு 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ., 'ரெய்டு'
ADDED : டிச 06, 2024 06:35 AM
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி செயலர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக மூன்று மாநிலங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி செயலராக இருந்தவர் பிரவீன் நெட்டார், 27. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 26 ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனால் கொலை வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்கிறது.
இந்த கொலையில் 23 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களை பற்றி தகவல் கொடுப்போருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்.ஐ.ஏ., அறிவித்து உள்ளது. இந்நிலையில் பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக கர்நாடகா, தமிழகம், கேரளா என மூன்று மாநிலங்களில் 19 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, குடகில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சில ஆவணங்கள், எலக்ட்ரானிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.