பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை: அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை: அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
ADDED : ஜன 10, 2026 05:21 PM

புதுடில்லி: டில்லியில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.
பார்லிமென்டில் பிப்ரவரி, 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025--26 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பின் ஒரு பகுதியாக, அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிதி அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களின் தேவைகள் மற்றும் பரிந்துரைகளை நிதி அமைச்சர்கள் முன்வைத்தனர்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 அன்று தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

