ADDED : அக் 06, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெயின்புரி:உ.பி., மாநிலம் ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜ்னி குமாரி,21,க்கும் மெயின்புரியைச் சேர்ந்த சச்சின் என்பவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு சச்சின், அவரது சகோதரர்கள் பிரன்ஷு, சஹ்பாக், உறவினர்கள் ராம் நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் ரஜ்னி குமாரியை துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரஜ்னியை, 3ம் தேதி கடுமையாக சித்திரவதை செய்ததில் உயிரிழந்தார்.
தங்கள் வயலிலேயே உடலை எரித்தனர். ரஜ்னி குமாரியின் பெற்றோர் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், சச்சின் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடுகின்றனர்.