அனுமதி மறுப்பால் கர்ப்பிணி பெண் மரணம்: மருத்துவர் மீது வழக்கு
அனுமதி மறுப்பால் கர்ப்பிணி பெண் மரணம்: மருத்துவர் மீது வழக்கு
ADDED : ஏப் 19, 2025 07:17 PM

புனே: புனே மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டநிலையில் , கர்ப்பிணிப் பெண் மரணம் அடைந்தார். அலட்சியமான இருந்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் தீனநாத் மங்கேஷ்கர் என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு
மாநில பா.ஜ., சட்டமன்ற உறுப்பினர் அமித் கோர்க்கேவின் தனிச் செயலாளர் சுஷாந்த் பிசேயின் மனைவி தனிஷா பிசே, கர்ப்பிணியாக இருந்த நிலையில், தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையை அணுகி உள்ளார். அங்கு சேர்க்கை பெற வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆனால் அவரது உறவினர்களால் பணத்தை செலுத்த முடியாததால் தனிஷா பிசேவுக்கு பிரசவ அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மற்றொரு மருத்துவமனைக்கு சென்ற தனிஷா பிசே, அங்கு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார். இந்நிலையில் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில், மகளிர் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்த டாக்டர் சுஷ்ருத் கைகாஸ் ராஜினாமா செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சுஷாந்த் பிசே போலீசில் புகார் அளித்தார்.
இதனடிப்டையில், சேர்க்கை மறுக்கப்பட்ட' நிலையில் கர்ப்பிணி இறந்தது தொடர்பாக டாக்டர் சுஷ்ருத் கைசாஸ் மீது,அலட்சியமாக இருந்ததாகக் கூறி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

