ADDED : மே 23, 2025 11:37 PM

லக்னோ : பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி பெங்களூரு அணியை வென்றது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடக்கும் 65-வது லீக் போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. அந்த அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காட்டிய ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 34 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 71 ரன்கள் எடுத்தது. ஹென்ரிச் கிளாசின் 13 பந்துகளில் 24 ரன்களுக்கும், அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தும் நிதிஷ்குமார் ரெட்டி 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தும், அபிநவ் மனோகர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும், இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் ஷெப்பர்டு அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
232 என்ற ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய பெங்களூரு அணியின் விராத் கோஹ்லி 43 ரன்களிலும், மாயங் அகர்வால் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய பிஹில்சால்ட் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த படிதார் 18 ரன்களிலும், ஷெப்பர்டு ரன் எதுவும் எடுக்காமலும், ஜிதேஷ் சர்மா 24 ரன்களிலும் அவுட்டாகினர். பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளர் சரிந்தன.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்ளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பில்சால்ட் 62 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் மலிங்கா, 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.