காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை
UPDATED : ஜன 30, 2024 12:57 PM
ADDED : ஜன 30, 2024 11:42 AM

புதுடில்லி: டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தியாகங்கள்
முன்னதாக காந்தியின் நினைவு தினத்தையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்ய எங்களை ஊக்குவிக்கின்றன.
நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வரலாறு சில வரிகளில்!
இந்திய சுதந்திரம் பெற முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி. இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் கூட, ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். அவர் 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.