ADDED : ஜூலை 25, 2011 03:51 PM

புதுடில்லி : தனக்கு 2.49 கோடி ரூபாய் அளவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தனது சொத்துக்கணக்கை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு அசையா சொத்துக்களாக 83.83 லட்சம் அளவுக்கு உள்ளதாகவும், அசையும் சொத்துக்களாக ரூபாய் 1.66 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அம்ராவதி மாவட்டத்தில் 39.60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு , 3.82 ஹெக்டேர் பரப்பளவில் 9.82 லட்ச ரூபாய் மதிப்புக்கு பண்ணை வீடு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் ஜல்கோன் பகுதியில் தனது தந்தையிடமிருந்து 7.81 லட்சரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்கள் கிடைத்துள்ளது. கடந்த 97-98ம் ஆண்டில் ஜல்கான் மாவட்டத்தில் 1.19 ஹெக்டேர் மற்றும் 1.49 ஹெக்டேர் பரப்பில் முறையே 3.64 லட்சம் மற்றும் 2.90 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். பல்வேறு வங்கிகளில் 68.80 லட்ச ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. கிராமப்புற மின்சார கழகத்தில் 29 லட்ச ரூபாய் அளவுக்கு பாண்டுகள் வாங்கியுள்ளார். அஞ்சல் அலுவலகத்தில் 4.71 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஸ்டேட் வங்கியில் 12.60 லட்ச ரூபாய் அளவுக்கு பொது சேம நலநிதியில் முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஜனாதிபதியிடம், 31 லட்சரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 69,134 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகைகள், சேமிப்பு கணக்கில் 16.33 லட்ச ரூபாய் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். கையிருப்பாக 1.87 லட்ச ரூபாய் வைத்துள்ளார். பங்குச்சந்தையில் 21,755 ரூபாய் முதலீடு செய்துள்ளார். சஞ்சீவினி சேமிப்பு மற்றும் முதலீடு நிறுவனத்தில் 66,640 ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.