செய்தித்தாள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைவுக்கு இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவர் இரங்கல்
செய்தித்தாள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைவுக்கு இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவர் இரங்கல்
ADDED : மே 16, 2024 02:42 PM

புதுடில்லி: இந்திய செய்தித்தாள் சங்கத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் மோகன் மறைவுக்கு, இந்திய செய்தித்தாள் சங்கத் தலைவர் ராகேஷ் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் சங்கத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் மோகன் இன்று( மே 16) காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிதது இந்திய செய்தித்தாள் சங்கத் தலைவர் ராகேஷ் சர்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நரேஷ் மோகன் பதவிக்காலத்தில் அவரின் கொள்கை மற்றும் தலைமைப்பண்பு காரணமாக செய்தித்தாள் சங்கம் நல்ல பலன் அடைந்தது. அவரது மறைவு, ஒட்டுமொத்த பிரிண்ட் மீடியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடு செய்ய முடியாத அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு மன வலிமையும், துணிவையும் தர, இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.