பாஜ.,வையும், பிரதமர் மோடியையும் புகழ்ந்த ஜனாதிபதி உரை: காங்.,தலைவர் கார்கே தாக்கு
பாஜ.,வையும், பிரதமர் மோடியையும் புகழ்ந்த ஜனாதிபதி உரை: காங்.,தலைவர் கார்கே தாக்கு
ADDED : ஜன 31, 2024 05:00 PM

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வை புகழும் வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரை இருந்தது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
இது குறித்து கார்கே கூறியிருப்பதாவது: ஜனாதிபதி உரையில் வேலைவாய்ப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வை புகழும் வகையில் ஜனாதிபதியின் உரை இருந்தது. இது பிரதமர் மோடிக்கான விளம்பரம். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் உரை
காங்.,எம்.பி சசி தரூர் கூறியதாவது: ‛‛ ஜனாதிபதி தேர்தல் உரையை வாசித்துள்ளார்.
இது ஒருதலைப்பட்சமாக இருந்தது. நாட்டில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து உரையில் ஏதுவும் இடம்பெறவில்லை. மக்கள் சிந்தித்து லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்'' எனக் கூறினார்.
கடின உழைப்பு
இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது: பிரதமர் மோடி கடின உழைப்பால் நாட்டை எவ்வாறு மாற்றியமைத்தார் என்பது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மக்களிடம் எடுத்துரைக்கும் போது எம்.பி., சசி தரூர் மற்றும் காங்கிரசாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.