மீண்டும் பிரதமர் மோடி; தே.ஜ.,கூட்டணி 378 தொகுதிகளை வெல்லும்; கருத்துக்கணிப்பில் தகவல்
மீண்டும் பிரதமர் மோடி; தே.ஜ.,கூட்டணி 378 தொகுதிகளை வெல்லும்; கருத்துக்கணிப்பில் தகவல்
UPDATED : மார் 07, 2024 04:29 AM
ADDED : மார் 06, 2024 03:25 PM

புதுடில்லி: 'வரும் லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 378 தொகுதிகளில் வெற்றி பெறும். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார்' என இண்டியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்., 23ம் தேதி வரை 543 தொகுதிகளிலும் இண்டியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இதில் மொத்தம் 1,62,900 பேர் ஓட்டளித்தனர். இவர்களில் 84,350 பேர் ஆண்களும், 78,550 பேர் பெண்களும் அடங்குவர்.
வரும் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 378 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆளும் பா.ஜ., மட்டும் 335 தொகுதிகளை கைப்பற்றும். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 98 தொகுதிககளையும் கைப்பற்றும்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி மற்றும் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் மீதமுள்ள 67 தொகுதிகளில் வெற்றி பெறுவர்.
மாநில வாரியாக முழு விபரம் இதோ!
* ஆந்திர பிரதேசம் - மொத்தம் 25 தொகுதிகள் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 10 தொகுதிகளிலும் வெல்லும்).
* அசாம் - மொத்தம் 14 தொகுதிகள் ( பா.ஜ., 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், அசோம் கண பரிஷத் ஒரு தொகுதியிலும், ஐக்கிய மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி ஒரு தொகுதியிலும் வெல்லும்).
* அருணாச்சல பிரதேசம்- மொத்தம் 2 தொகுதிகள் (பா.ஜ.,2 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* பீஹார் - மொத்தம் 40 தொகுதிகள் ( பா.ஜ., 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 3 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி ஒரு தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், இந்துஸ்தானி பொது மோர்ச்சா கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும்).
* சத்தீஸ்கர்- மொத்தம் 11 தொகுதிகள் (பா.ஜ.,10 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெல்லும்).
* கோவா- மொத்தம் 2 தொகுதிகள் ( பா.ஜ.,2 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* குஜராத் - மொத்தம் 26 தொகுதிகள் ( பா.ஜ., 26 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* ஹரியானா - மொத்தம் 10 தொகுதிகள் ( பா.ஜ., 10 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* ஹிமாச்சல பிரதேசம் - மொத்தம் 4 தொகுதிகள் (பா.ஜ., 4 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* கர்நாடகா - மொத்தம் 28 தொகுதிகள் ( பா.ஜ., 22 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும்).
* மத்தியப் பிரதேசம் - மொத்தம் 26 தொகுதிகள் ( பா.ஜ., 26 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* மணிப்பூர் - மொத்தம் 2 தொகுதிகள் (பா.ஜ., 1 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெறும்)
* பஞ்சாப்- மொத்தம் 13 தொகுதிகள்(ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், பஞ்சாப் 3 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும்)
* ராஜஸ்தான் - மொத்தம் 25 தொகுதிகள் ( பா.ஜ., 25 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* தமிழகம்- மொத்தம் 39 தொகுதிகள் ( தி.மு.க., 20 தொகுதிகளிலும், அ.தி.மு.க 4 தொகுதிகளிலும், பா.ஜ., 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பா.ம.க ஒரு தொகுதியிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெல்லும்)
* தெலுங்கானா- மொத்தம் 17 தொகுதிகள் ( காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், பா.ஜ., 5 தொகுதிகளிலும், பி.ஆர்.எஸ் 2 தொகுதிகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும்)
* திரிபுரா- மொத்தம் 2 தொகுதிகள் ( பா.ஜ., 2 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* லடாக் - மொத்தம் 1 தொகுதி ( பா.ஜ., 1 தொகுதியையும் கைப்பற்றும்).
* லட்சத்தீவு - மொத்தம் 1 தொகுதி ( காங்கிரஸ் 1 தொகுதியையும் கைப்பற்றும்).
* டில்லி - மொத்தம் 7 தொகுதிகள் ( பா.ஜ., 7 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* புதுச்சேரி - மொத்தம் 1 தொகுதி ( பா.ஜ., 1 தொகுதியையும் கைப்பற்றும்).
* நாகாலாந்து: மொத்தம் 1 தொகுதி (தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 1 தொகுதியையும் கைப்பற்றும்)
* தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ: மொத்தம் 2 தொகுதிகள் ( பா.ஜ., 2 தொகுதிகளையும் கைப்பற்றும்).
* மேகாலயா - மொத்தம் 2 தொகுதிகள் (தேசிய மக்கள் கட்சி - 2 தொகுதிகளையும் வெல்லும்)
* மிசோரம் - மொத்தம் 1 தொகுதி (சோரம் மக்கள் முன்னணி - 1 தொகுதியையும் கைப்பற்றும்)
* கேரளா - மொத்தம் 20 தொகுதிகள் (ஐக்கிய ஜனநாயக முன்னணி - 11 தொகுதிகளையும், இடது ஜனநாயக முன்னணி - 6 தொகுதிகளையும், பாஜ., -3 தொகுதிகளையும் வெற்றி பெறும்)
* ஜார்க்கண்ட்- மொத்தம் 14 தொகுதிகள் (பா.ஜ., -12 தொகுதிகளையும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் - 1 தொகுதியிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - 1 தொகுதியிலும் வெற்றி பெறும்)
* மஹாராஷ்டிரா - மொத்தம் 48 தொகுதிகள் (பாஜ., 25 தொகுதிகளையும், சிவசேனா உத்தவ் அணி 8 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் அணி - 4 தொகுதிகளையும், சிவசேனா ஷிண்டே அணி - 6 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி - 3 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளையும் கைப்பற்றும்)
* ஒடிசா- மொத்தம் 21 தொகுதிகள் (பிஜூ ஜனதா தளம் 11 தொகுதிகளையும், பா.ஜ., 10 தொகுதிகளையும் கைப்பற்றும்)
* சிக்கிம் - மொத்தம் 1 தொகுதி
* உத்தரபிரதேசம்- மொத்தம் 80 தொகுதிகள் ( பா.ஜ., 74 தொகுதிகளையும், சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளை யும், அப்னா தள் 2 தொகுதிகளையும், ராஷ்ட்ரிய லோக் தளம் 2 தொகுதிகளையும் கைப்பற்றும்)
* ஜம்மு காஷ்மீர்- மொத்தம் 5 தொகுதிகள் (தேசிய மாநாட்டு கட்சி 3 தொகுதிகளையும், பா.ஜ., 2 தொகுதிகளையும் வெற்றி பெறும்)
* சண்டிகர் - மொத்தம் 1 தொகுதி ( பா.ஜ., ஒரு தொகுதியையும் கைப்பற்றும்)
* உத்தரகண்ட் - மொத்தம் 5 தொகுதிகள் ( பா.ஜ., 5 தொகுதிகளையும் வெல்லும்)
* மேற்கு வங்கம்- மொத்தம் 42 தொகுதிகள் (திரிணமுல் காங்கிரஸ் 21 தொகுதிகளையும், பா.ஜ., 20 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் கைப்பற்றும்).

